கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர், “தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.