கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதே போல் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே 75 பேர் உடல் நலம் பாதித்து சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 900 லிட்டர் விஷச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.