அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள ‘லெவல் கிராஸ்’ படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரொமோஷனில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். புரொமோஷனுக்காக கேரளாவில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவுக்கு அவர் கவர்ச்சி உடையில் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள அவர், ‘நான் எனக்கு வசதியான உடையைத்தான் அணிந்திருந்தேன். அதை படம் பிடித்தவர்கள் கவர்ச்சியாக காட்டிவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.