லியோ படத்தில் ‘Badass’ பாடல் எழுதி விஷ்ணு இடவன் கவனம் பெற்றார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின், நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் மூத்த பெண்ணை காதலிப்பதும், அதில் இருக்கும் சிக்கல்களுமே படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அடுத்த வாரத்தில் முக்கிய காட்சிகள்
சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.