மத்திய அரசு ஒரு ரூபாய் அளித்தால், 15 காசுகள் மட்டும் மக்களுக்கு சென்று, மீதம் 85 காசுகள் ஊழல் நடந்த காலம் இந்தியாவில் இருந்ததாக காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் உரையாற்றி வரும் அவர், ஏழை மக்கள் வீடு வாங்க வேண்டுமானால், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும், கேஸ் இணைப்பு பெற எம்.பிக்கள் பின்னால் அலைய வேண்டிய சூழல் நிலவியதாகவும் விமர்சித்துள்ளார்.