நெல்லை, கோவையை தொடர்ந்து காஞ்சி திமுக மேயர் மகாலட்சுமியும் ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகாலட்சுமி மீது திமுக உட்பட 33 கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், அவருக்கு எதிராக ஜூலை 29ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால், அவரிடம் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி, ராஜினாமா செய்ய வைக்கும் என தெரிகிறது.