மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இந்நிலையில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வித்தியாசமான முழு நீள நகைச்சுவை கதாபாத்திரம் இருக்க வேண்டும் எனவும் அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.