கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பப்பதிவு கால அவகாசம் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, கால்நடை மருத்துவப்பட்டப்படிப்புக்கு 11,586 விண்ணப்பங்களும், பி.டெக் பட்டப்படிப்புக்கு 2,392 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை தொடர்ந்து வருகின்ற ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.