தூத்துக்குடியில் இன்று செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை வாரியம் மேலாண்மை ஒழுங்குமுறை குழு என்ன ஆணையிட்டு உள்ளதோ அதனை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் ஒன்றிய அரசு இதில் தலையிட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.