சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 188 டெஸ்டில் விளையாடிய அவர், 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட் 32 முறையும், 10 விக்கெட் 3 முறையும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,000 பந்துகளை வீசி, இன்றைய போட்டியில் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.