தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகிப்பதில் கவனம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 20 நாட்களில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 9 பேர் பலியானதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.