துருக்கியில் பிளாஸ்டிக் பைகளை உள்ளே போட்டால் நாய்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கும் புதிய வெண்டிங் மெஷின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் விருப்பம் தெரிவித்துள்ளார். விலங்குகள் நல ஆர்வலர் என்ஜின் கிர்கின் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014ஆம் வருடம் இஸ்தான்பூரில் இந்த திட்டத்தை தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலமாக குப்பைகள் சரியாக கையாளப்படுவதோடு விலங்குகளின் பசியையும் போக்க உதவுவதால் பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.