தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் 19 நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் அலைகள் அதிக உயரத்தில் எழும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அசம்பாவிதத்தை தடுக்க படகுகளை இடைவேளை விட்டு நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.