TNPSC குரூப்-2/2ஏ பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூக நீதிக்கு எதிரானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், 2327 பணிகளில் 446 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தப் பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை TNPSC உடனே திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்