தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 குரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தேர்வு தாள்கள் திருத்தம் இந்த மாதம் தொடங்கும் என்றும், ஆனால் திருத்தம் முடிய 6 மாதம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே முடிவுகள் வர பிப்ரவரிக்கு பிறகு ஆகலாம் என்கிறார்கள்.