குழந்தை பிறந்த உடன் அதன் பெயரில் ஒரு சிறிய தொகையை SIP-ல் முதலீடு செய்தால், குழந்தை வளரும்போது, முதலீடும் பல மடங்கு வளர்ந்துவிடும். அதன்படி குழந்தை பிறந்தவுடன் மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் ஆண்டுக்கு 12% வட்டியில் 20 ஆண்டுகளில் சுமார் ரூ.21 லட்சம் குவியும். இதில் 16 லட்சம் ரூபாய் வட்டியாக மட்டுமே கிடைக்கும். SIPயில் முதலீடு செய்பவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இதன் மூலமாக நமக்கு வரக்கூடிய தொகையும் உயர்ந்து கொண்டே இருக்கும்.