தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் 1768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வை மொத்தம் 26 ஆயிரத்து 510 பேர் எழுத உள்ளனர்.