அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை இபிஎஸ் முன்வைப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை திவாலாகும் நிலைக்கு முந்தைய அதிமுக அரசு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது அதனை சரிசெய்து நல்ல முறையில் இயங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழல் நடைபெறுவதாக இபிஎஸ் கூறியிருந்தார்.