வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ₹1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில், நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 200க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சூழலில், அதிமுக நிதியுதவி அறிவித்துள்ளது.