‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுமாறு அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், சில குறைகளை சுட்டிக் காட்டி மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது. அக்குறைகளை சரி செய்து தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.