சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், தங்கள் கைலாசா நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம் செலவு கிடையாது என கூறியுள்ளார். மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இந்த சட்டம் மாற்றப்படாது என்றும் நாளை கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.