குருகுலம், இந்து பல்கலைக்கழகம் மற்றும் தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் கைலாசாவில் அமைய உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இது குறித்து youtube வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளார். மேலும் இராணுவமும் காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்றும் வரி விதிப்பு முறை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.