பா.ஜ.கவுடன் பல்வேறு எதிரும் புதிருமான கொள்கைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு தலைவர்களும் எப்படி கூட்டணி ஆட்சியில் இணக்கமாக செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது
- இந்தியா கூட்டணியின் மறைமுக அழைப்புக்கு நோ சொல்லி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே எங்களின் ஆதரவு என டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் உறுதிபடத் தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவிருக்கிறார். அவருடன் நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தநிலையில், பா.ஜ.கவுடன் பல்வேறு எதிரும் புதிருமான கொள்கைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கும் இந்த இரண்டு தலைவர்களும் எப்படி கூட்டணி ஆட்சியில் இணக்கமாக செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
- நடந்து முடிந்திருக்கும் 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் கட்டாயம் தேவை எனும் பட்சத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், பா.ஜ.க தனித்து வென்ற தொகுதிகள் 240 மட்டுமே. எனவே, கடந்த இரண்டு தேர்தலில் பெற்றதைப்போல பா.ஜ.கவுக்கு இந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ஆட்சியமைக்க முற்றுமுழுதாக கூட்டணிக் கட்சிகளிடம் சரணாகதியாகியிருக்கிறது பா.ஜ.க.
- குறிப்பாக, பா.ஜ.க கூட்டணியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய கட்சிகளாக இருக்கும் பீகாரின் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) 12 தொகுதிகளையும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி (TDP) 16 தொகுதிகளையும் வெற்றிக்கணக்காக வைத்திருக்கிறது. ஆகவேதான், இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் தங்கள் கூடாரத்துக்குள் கொண்டுவந்தால் ஆட்சியமைத்துவிடலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிதிஷும் சந்திரபாபுவும் பாஜகவுக்கே தங்கள் ஆதரவு என்பதை உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். ஆகவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியே அரியணை ஏறவிருப்பது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.
- இந்த நிலையில், சமூகநீதி பேசும் நிதிஷும், சிறுபான்மையினர் நலன் பேசும் சந்திரபாபுவும் பா.ஜ.கவின் அஜெண்டாக்களுக்கு மாறான கொள்கைகளைக் கொண்டவர்களாக இருப்பதால் இந்த கூட்டணியின் எதிர்காலம் எதுவரை நீளும் என்ற பொதுவான ஐயம் எழுந்திருக்கிறது. அதேபோல, இந்த இருவரும் இல்லாமல் இனி ஆட்சியில்லை என்ற நிலையில், இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்கான நிபந்தனைகளை அடுக்கி, பா.ஜ.கவையே மிரளவிட்டிருக்கின்றனர். குறிப்பாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் அமைச்சரவை பங்கீட்டைப் பொறுத்தவரையில் 3 கேபினட் அமைச்சர்கள் 2 இணை அமைச்சர்கள் பதவியையும் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என கோரியிருக்கிறார்.

- குறிப்பாக, ஐ.ஜ.த தலைவர் நிதிஷ்குமார், இந்தியாவிலேயே முதல்முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியவர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு முரண்டுபிடித்த நிலையில், அதிரடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் தரவுகளை வெளியிட்டு பா.ஜ.க அரசையே திக்குமுக்காடச் செய்தவர். மேலும், அதன்படி தற்போதுள்ள 50% இடஒதுக்கீட்டை 65%-மாக உயர்த்தவும் முன்மொழிந்தார். ஆதலால்தான் சமூக நீதித்தலைவர் என்ற பெயரும் நிதிஷுக்கு உண்டு. ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தவரையில், வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும் பெரும்பாலான பா.ஜ.க ஆட்சியாளர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே இருந்துவருகின்றனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் நடத்துவோம் என வாக்குறுதி கொடுத்த நிலையில், பா.ஜ.க அதுகுறித்து வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முன்மாதிரித் தலைவரான நிதிஷ்குமார் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது, இந்த விவகாரத்தில் கருத்துமுரண்பாடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

- ஆனால் மோடியின் முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, “முஸ்லீம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வருகிறோம், அது எப்போதும் தொடரும்!” என அதிரடியாகப் பேசினார். பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட போதும்கூட சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின்போது, “மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், ஹஜ் யாத்திரைக்காக மெக்காவிற்கு வரும் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்!” என அறிவித்தார்.
- இதுபோன்ற முரண்பாடான கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிப் பேச்சுகளாக இருக்கும்வரையில் பிரச்னை இல்லை; இதுவே தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்து, இவற்றை செயல்திட்டமாக அறிவிக்க வேண்டும் என நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் அழுத்தம்கொடுக்கும்போது பா.ஜ.க ஆட்சி ஆட்டம் காண வாய்ப்பிருக்கிறது!’ என யூகிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.