கோயில்களில் திருமணம் செய்வோரில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி எனில் சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள 4 கிராம் தங்கம், மண்டபம் இலவசம் என்ற சலுகையுடன் ₹60 ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகள் வழங்கப்படும் என்றும் நிதி வசதியற்ற கோயில்களில் குறைந்த ஊதியம் பெறும் இசை கலைஞர்களுக்கு ₹10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.