தமிழ்நாட்டில் 3 ஆண்டு LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.,யுடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சட்டப் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.