சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதால் சட்டப்பேரவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து சபாநாயகர் தனது நடவடிக்கையை ரத்து செய்தார்.