சென்னையில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 197 பந்துகளில் 205 ரன்கள் அடித்த அவர் ஒரு ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்துள்ளது.
அதே சமயம் ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மேலும் ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனையையும் தற்போது அவர் முறியடித்துள்ளார்.