விதிகளை மதிக்காமல் அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கூற வேண்டிய பதில்கள் அனைத்தையும் சபாநாயகர் அப்பாவு கூறிவருவதாக குற்றஞ்சாட்டிய அவர், சபாநாயகர் தன்னிச்சையாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விமர்சித்தார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.