விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்?, இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்? கள்ளச்சாராய குற்றவாளிகளை பாதுகாப்பது எந்தக் கட்சி அரசு?. அனைத்து வினாக்களுக்கும் ஸ்டாலின் தான் விடை” என குறிப்பிட்டுள்ளார்.