உத்திரபிரதேசம் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய சாமியார் போலே பாபா தலைமறைவானார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், தான் சென்று பல மணி நேரங்களுக்கு பிறகு தான் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் கூட்டத்திலிருந்து சமூகவிரோதிகள் தான் நெரிசலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.