தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு, சமத்துவம், நீதி கிடைக்க அவர் இடைவிடாமல் போராடியதாக புகழ்ந்துள்ள அவர், சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.