சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று கூறிய அவர், சாட்டை பயன்படுத்திய வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா இல்லையா என்பதை படித்துப் பார்த்துவிட்டு பேசுங்கள் என கூறினார். சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி பரப்புரையில் கருணாநிதியை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.