தமிழக சட்டப்பேரவையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் தமிழகத்தில் அதனை அமல்படுத்த முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு பதிலளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார். அத்துடன், பிஹாரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.