கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இச்சம்பவம் மரக்காணம், செங்கல்பட்டு சம்பவங்களின் தொடர்ச்சி என கூற முடியாது என்றும், இதில் 65 பேர் பலியானதாகவும், 145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளது. மேலும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது