மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் சிறுமிக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது. முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றார். சிறுமியின் தாயுடன் சிலர் சண்டையிட்டுள்ளனர். பிறகு சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். அப்போது அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.