சமையல் சிலிண்டரில் கேஸ் கசிந்து தீப்பிடித்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும். ஆதலால் சமையலின் போது கேஸ் கசிவதாக சந்தேகம் ஏதாவது இருந்தால் உடனே அவசர உதவி எண் 1906 அல்லது கேஸ் சிலிண்டர் அலுவலக எண்ணுக்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம். பிரச்சனையின் தீவிரம் கருதி உடனே பிரதிநிதி அனுப்பி வைக்கப்படுவார். அவர் வந்து ஆய்வு செய்து சிலிண்டரை மாற்ற ஏற்பாடு செய்வார். இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்க படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.