வீட்டு உபயோக சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு முறையை பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதனால் கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். முன்னதாக மானிய விலை சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.