சி.ஏ. இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், இதுவரை இல்லாத அளவாக 20,446 பேர் தேர்ச்சியடைந்து பட்டயக் கணக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். வழக்கமாக 13,000 முதல் 15,000 பேர் வரையே இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா 83.33% மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். 2ஆம் இடத்தை வர்ஷா அரோரா, 3ஆம் இடத்தைகிரண் ராஜேந்திர சிங், கில்மான் சாலிம் ஆகியோர் படித்துள்ளனர்