பட்டயக் கணக்காளர் பணிக்கான சி.ஏ. இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடந்த இத்தேர்வுகளை சுமார் 4.50 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனுடன், சி.ஏ. இன்டர் மீடியேட் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவிகள் www.icai.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். இதுவரை இல்லாத வகையில் இம்முறை 20,446 பேர் பட்டய கணக்காளர்களாக தேர்வாகி உள்ளனர்.