தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.