தகுதியில்லாத சுப்மன் கில் எப்படி ஒருநாள், டி20 இரு ஃபார்மேட்டுக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ரேங்க் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜிம்பாப்வேயில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா புறக்கணிக்கப்பட்டு சுப்மன் கில்லுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்..