சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும்போது அவர்கள் கொடுக்கும் பில்-ஐ சரியாக பார்க்காமல் தெரியும் பணத்தை கட்டிவிட்டு வருவோம். அதன்படி, காரைக்குடியில் இயங்கிவரும் ஸ்மார்ட் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நபர் ஒருவர் வாங்கிய 72 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு ரூ.252 என போட்டிருக்கிறார்கள். அவர் எதேர்சையாக பார்த்து கேட்டதால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளார்கள். அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைத்துள்ளார்.