ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பால் டாமின்கஸ் என்ற பதினோரு வயது சிறுவனுக்கு வெயில் என்றாலே அலர்ஜி. மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஜெரோடெர்மா பிக்மென்டோசம் என்ற இந்த அரிய வகை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். சூரிய ஒளி அந்த சிறுவன் மீது பட்டால் தோலின் வெளிப்புறத்தில் அலர்ஜி மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாள் முழுவதும் உடலை மறைத்தவாரே வெளியில் செல்கின்றான் அந்த சிறுவன்.