டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். பவுலர்களின் பலம், பலவீனங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பீல்டிங்கை செட்டிங் செய்யும் யுக்தியை சூர்யகுமார் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர், பேட்டிங்கில் விளையாடுவதைப் போலவே அவருடைய கேப்டன்ஷிப்பும் இருக்க வேண்டும் என்றார்.