ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற நபர் குடும்ப சூழல் காரணமாக துபாய் சென்றுள்ளார். இதற்காக 2 லட்ச ரூபாய் செலவு செய்து ஆடு மேய்க்கும் வேலை பார்க்க ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை ஆள் நடமாட்டம் இல்லாத நடு பாலைவன பகுதியில் விட்டு ஆடுகள் மற்றும் வாத்துகளை மேய்க்க விட்டுள்ளனர். பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் கஷ்டப்படும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இன்னும் இரண்டு நாள் இருந்தால் செத்துவிடுவேன் உதவி செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.