சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொளியில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.