சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகள் என மின்சார வாரிய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.