சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூஆர் குறியீடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக்கொண்டால் 20 விழுக்காடு சலுகைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.