தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த மே 7 ஆம் தேதி முதல் கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.