செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர் உணவுத் திருவிழா இன்று நடைபெற்றது. உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பி., கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த உணவுத் திருவிழாவில் இலங்கை, பர்மாவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த விழா இன்று முதல் வருகின்ற 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.